நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்
நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், அனுப்பியுள்ள கடிதம்: தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. எனவே தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்ககோரப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது.
Next Story