வாணியம்பாடியில் சமத்துவ பொங்கல் விழா

வாணியம்பாடியில் வணிகர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வணிகர் சங்கங்கள் சார்பில் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டத்துடன் கொண்டாப்பட்ட சமத்துவ பொங்கல் விழா. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள வாரச்சந்தை பகுதியில் வாணியம்பாடியை சேர்ந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வாணியம்பாடி அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமத்துவ பொங்கல் விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் கொண்டாடப்பட்டது, இதில், சிறப்பு அழைப்பளராக வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கலந்துகொண்டு பொங்கல் பானையை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சிலம்பம் நடைப்பெற்றது,இந்த சமத்துவ பொங்கல் விழாவில் வணிகர் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்..
Next Story