அமெரிக்கா நட்புணர்வு நண்பர்களுக்கு உற்சாக வரவேற்பு.
Madurai King 24x7 |11 Jan 2025 1:20 PM GMT
மதுரை வந்த அமெரிக்கா நட்புணர்வு நண்பர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரை விமான நிலையம் வந்த அமெரிக்க கலாச்சார நட்புணர்வு நண்பர்களுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்த சாமி தலைமையில் இன்று ( ஜன.11) வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் அனைத்து ரோட்டரி சங்கங்களின் சார்பில் வரவேற்பு குழு தலைவர் ரவி பார்த்தசாரதி, வினோதன், மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர்தாஸ்,செயலாளர் பிரவின்குமார் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு, செயலாளர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் மஞ்சள் கொத்து கொடுத்தும் அவர்களை வரவேற்றனர். மதுரை விமான நிலையத்தில் வரவேற்பை பெற்று கொண்ட அவர்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்க கூறினர். மதுரை வந்த அமெரிக்க நாட்டை சேர்ந்த ரோட்டரி சங்கத்தினர் மதுரை மக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திடவும், ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் நலத்திட்டங்கள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளனர்.தொடர்ந்து தமிழரின் வீரவிளையாட்டாகக் கருதப்படும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க உள்ளனர்.
Next Story