தும்பைப்பட்டியில் சனி பிரதோஷ வழிபாடு
Madurai King 24x7 |11 Jan 2025 1:25 PM GMT
மதுரை மேலூர் தும்பைப்பட்டி சிவாலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத, வளரபிறை சனிமகா பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது.. இன்று (ஜன.11,)மாலை 4.30 மணிக்கு சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமியும் , நந்தியம் பெருமாளும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சங்கு நாதம் முழங்க, தீப ஆராதனைகளுடன் திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.
Next Story