மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்து வந்தவருக்கு
Nagapattinam King 24x7 |11 Jan 2025 2:15 PM GMT
போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு
நாகை மாவட்டம் வாய்மேடு காவல் துறையினர், மருதூர் ரோட்டரி சங்கம், மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மருதூர் கடை தெருவில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மருதூர் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கேப்டன் தமிழரசன் தலைமை வகித்தார். விழாவில், மருதூர் ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் பஞ்சாபகேசன், உதவி ஆளுநர் தேர்வு இலக்குவன், உதவி ஆளுநர் நியமனம் கண்ணன் மற்றும் முன்னாள் தலைவர்கள் ஆறுமுகம், சண்முகம், சித.கருணாநிதி, தலைவர் தேர்வு அமிர்தலிங்கம், வாய்மேடு காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவி சிங்காரவேல், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை குறித்தும், வாகனத்தில் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர். மேலும். சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கம் அளித்தனர். சாலை பாதுகாப்பு விதிகளை மதித்து தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருக்கு சால்வை அணிவித்து , இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு தலைக்கவசம் அணிந்து வர அறிவுரை வழங்கப்பட்டது. முடிவில், ரோட்டரி சங்க செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.
Next Story