சனி பிரதோஷத்தை முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் உள்ளது.இந்த நிலையில் சனிக்கிழமை சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் மற்றும் கைலாசநாதர்க்கு,பால்,தயிர்,தேன், இளநீர்,விபூதி பன்னீர்,எலுமிச்சை மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு ஆலயத்தின் சிவச்சாரியார்கள் பூக்களால் அலங்கரித்து பூஜை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ தர்ம சம்பர்த்தினி தாயார் கோவிலை சுற்றி திருத்தேரில் பவானி சிறப்பாக நடைபெற்றது. சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...
Next Story