காவல்துறை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு
Tiruppur King 24x7 |11 Jan 2025 2:33 PM GMT
காங்கேயத்தில் காவல்துறை சார்பில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு
கார்த்திகை மாதம் துவங்கி பங்குனி மாதம் வரை பக்தர் மாலையிட்டு பழனி மழை செல்லக்கூடிய சீசன் நாட்கள் ஆகும். இவ்வாறு காங்கேயம் வழியாக செல்லக்கூடிய பக்தர்கள் நலன் கருதி காங்கேயம் காவல் துறையினர் சார்பில் பக்தர்களுக்கு சாலையில் கவனமாக நடந்து செல்ல வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளையும் அறிவுரை வழங்கினர். மேலும் வரும் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காங்கயத்தின் வழியே செல்லும் பழனி மழை பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே காங்கயம்- தாராபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. எனவே விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு காங்கயம் துணை காவல் கண்காணிப்பாளர் மாயவன் உத்தரவின் பேரிலும், காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திகுமார் அறிவுறுத்தலின் படியும் இன்று மாலை 5 மணி அளவில் காங்கயம் தாராபுரம் சாலையில் செல்லக்கூடிய பக்தர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
Next Story