ஜல்லிக்கட்டில் டிராக்டர், கார்கள் பரிசு.
Madurai King 24x7 |12 Jan 2025 1:14 AM GMT
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் வழங்கபடவுள்ள பரிசுகள் விபரம் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜன.15ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ள நிலையில் நேற்று (ஜன.11) கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மச்சவேல் தலைமையில் நடந்தது. செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன் பின்னர் கமிட்டியினர் கூறியதாவது: சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக டிராக்டர், 2ம் பரிசாக இரு கார்கள் மற்றும் 3ம் பரிசுகளாக கன்றுடன் கூடிய நாட்டுப் பசு, டூவீலர்கள், பீரோ, கட்டில், சைக்கிள்,தங்கக் காசு, விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் ஆகியனவும் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியின் போது டோக்கன் நம்பர் வரிசையில் காளைகள் அவிழ்த்து விடப்படும். காளைகள் அதன் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
Next Story