பழைய பொருள்களை எரிப்பதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

பழைய பொருள்களை எரிப்பதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்
பழைய பொருள்களை எரிப்பதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் போகி பண்டிகையின் போது பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகி பண்டிகையின்போது பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படும். இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, போகி பண்டிகையின்போது, பழைய பொருள்கள் எரிப்பதை தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். புகையில்லா போகி கொண்டாடுவோம், சுற்றுச்சூழலைக் காப்போம் என்றாா் அவா்.
Next Story