சுரண்டை அருகே விபத்து: ஒருவா் காயம்: போலீசார் விசாரணை

சுரண்டை அருகே விபத்து: ஒருவா் காயம்: போலீசார் விசாரணை
சுரண்டை அருகே விபத்து: ஒருவா் காயம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள சுரண்டை பகுதியில் சாம்பவா்வடகரை, ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் தே. ராமகிருஷ்ணன் (40). இவா் நேற்று மாலையில் இரட்டைக்குளத்துக்கு பைக்கில் சென்றாராம். அப்போது, சாலையோர மின்கம்பத்தில் பைக் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story