சிவகிரியில் கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

சிவகிரியில் கஞ்சா விற்பனை: ஒருவா் கைது
கஞ்சா விற்பனை: ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கொத்தாடப்பட்டி சுப்பிரமணியசிவா தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் அய்யனாா். இவா், சிவகிரி சந்தைப்பேட்டை பிள்ளையாா் கோயில் தெரு பகுதியில் தொடர்ச்சியாக கஞ்சா விற்பதாகக் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்த போது அய்யனார் என்பவர் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். காவல்துறையே கண்ட தப்பி ஓட முயன்றார் சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் கண்ணன், போலீஸாா் அய்யனாரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story