கரூரில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் களைகட்டிய பொங்கல் விழா.

கரூரில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் களைகட்டிய பொங்கல் விழா.
கரூரில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் களைகட்டிய பொங்கல் விழா. கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செயலாளர் விசா. சண்முகம், பொருளாளர் வீரப்பன்,துணைத் தலைவர் மனோகரன் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள், இருபால் பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் தயாரித்து அனைவருக்கும் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய உடை அணிந்து கல்லூரி மாணவ- மாணவியர்கள் பல்வேறு தமிழ் திரைப்பட பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
Next Story