கோவை: இடைத்தேர்தலில் பாஜக நிற்கப் போவதில்லை !

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடப் போவது இல்லை என தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர், தமிழகத்தில் நடக்கக் கூடிய அசாதாரண சூழ்நிலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஒரு இடைத்தேர்தல், விக்கிரவாண்டியிலும் தேர்தல் நடைபெற்றதை நாம் பார்த்தோம்,அதனால் இடைத்தேர்தல் புறக்கணிப்பு என பா.ஜ.க முடிவெடுத்து உள்ளது. பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுக்கு அனுமதி அளித்தார்.எங்கேயும் தேர்தலை புறக்கணித்தது இல்லை பா.ஜ.க. தமிழகத்தில் லஞ்ச லாவணயம், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நாம் எல்லாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் இதை கூர்ந்து கவனிப்பார்கள், தேசிய ஜனநாயக கூட்டணி அடைத்து வைப்பார்கள், தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலில் நின்றிருந்தால் கடந்த முறை மக்களை பட்டியில் அடைத்ததை போன்று இந்த முறையும் அடைப்பார்கள்.. அது வேண்டாம் என்பதால்தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். இதை தமிழக மக்கள் உணர்வார்கள் என்பதை நம்புகிறோம். தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்கள் தேர்தலை புறக்கணிப்பது இதுவே முதன்முறையாக நான் பார்க்கிறேன். தமிழக மக்கள் நிச்சயமாக எதற்கு என்ற கேள்வியை கேட்பார்கள். இத்தனை கட்சிகள் எதற்காக இந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதை பரிசீலிப்பார்கள் என்று கூறினார்.
Next Story