பட்டுக்கோட்டை குளத்தில் தவறி விழுந்து சிறுமி பலி

பட்டுக்கோட்டை குளத்தில் தவறி விழுந்து சிறுமி பலி
X
கிரைம்
குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி குளத்தில் மூழ்கி பலி- பந்து தவறி குளத்தில் விழுந்த நிலையில் அதை எடுக்கச் சென்று போது நிகழ்ந்த விபரீதம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான சீனிவாசன் நகர் ஐயப்பன் கோயில் தெரு பகுதியில் வசித்து வருபவர் சந்திரன். இவரது மகள் ஹரிணி ஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று விடுமுறை என்பதால் இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள நாடியம்மன் கோயில் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்து தவறி குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்தப் பந்தை எடுக்க முயன்ற போது தவறி விழுந்து குளத்தில் மூழ்கி பலியானார். விளையாடச் சென்ற குழந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லையே என்று வீட்டில் உள்ளவர்கள் தேடி பார்த்த பொழுது சிறுமி ஹரிணி ஸ்ரீ யின் உடல் குளத்தில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பட்டுக்கோட்டை நகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story