இளவட்டக்கல் தூக்கும் போட்டி, முதல் பரிசை வென்ற டிரினிடி கல்லூரி மாணவி.

X
NAMAKKAL KING 24X7 B |17 Jan 2025 12:59 PM ISTதமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோடு நகரம் - நெசவாளர் காலனியில் நடைபெற்றது.
இதில் ஆடவர் மட்டுமன்றி மகளிரும் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு பி.ஏ. தமிழ்ப் பாடப்பிரிவு மாணவி எஸ். பவதாரணி, 67 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லைத் தூக்கி முதல் பரிசினையும் வென்றார். சாதனை புரிந்த எஸ். பவதாரணியை கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி, செயலர் எஸ். செல்வராஜ், செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், உடற்கல்வி இயக்குனர் வீ .அர்ச்சனா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியைகள் டி.கே. அனுராதா, ஆர். சாவித்திரி, எஸ். ஜெயமதி, ஏ. லதா, பி. விஷ்ணுபிரியா, சி. கோபியா, ஆர். ஏ. அனிதா, எஸ். ஹேமலதா, கே. பாரதி, டி. கீதா, கே. பத்மாவதி மற்றும் என். சுபலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.
Next Story
