துாய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

துாய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ஊராட்சியில், துாய்மை பாரத இயக்கம் சார்பில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமத்தை நோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார்.துணை தலைவர் சபரிநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் கல்யாணி முன்னிலை வகித்தனர்.துாய்மை பாரத இயக்கம் ஊக்குநர் சுந்தரி, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், துப்புரவு பணியாளர்கள் கம்சலா, முனியம்மாள், புஷ்பராணி மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சியாகவும், சுகாதாரமான நிலையை ஏற்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story