திராவிட தமிழர் கட்சியினர் பாஜக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்- சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோருக்கு தபால் மூலமாக மாட்டு கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டம்

திராவிட தமிழர் கட்சியினர் பாஜக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்- சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோருக்கு தபால் மூலமாக மாட்டு கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டம்
X
திராவிட தமிழர் கட்சியினர் பாஜக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்- சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோருக்கு தபால் மூலமாக மாட்டு கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
விருதுநகரில் திராவிட தமிழர் கட்சியினர் பாஜக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்- சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகியோருக்கு தபால் மூலமாக மாட்டு கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாட்டு கோமியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்த நிலையில் தமிழகத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பாஜகவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்திருந்தார். மாட்டு கோமியம் விவகாரத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் தலைமை தபால் நிலையத்தில் திராவிடர் தமிழர் கட்சி சார்பாக பாஜகவின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஆகிய இருவருக்கும் தபால் மூலமாக மாட்டு கோமியம் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கட்சியை சேர்ந்தவர்களிடம் தபால் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர்
Next Story