ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது
ராமேஸ்வரம் அமிர்த வித்யாலயம் பள்ளியின் ஆண்டு விழாவானது (விவித சன்ஸ்க்ரிதி) என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினார்களாக ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்களும்,மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மீன்வள விஞ்ஞானி ராஜ் சரவணன் அவர்களும் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரையாற்றினார்கள் பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா தலைமையில் விழா நடைபெற்றது. தேசியம், தெய்வீகம், கலாச்சாரம், பரத நாட்டியம் ,பல மாநிலங்களின் புகழ்பெற்ற நடனங்கள், நாட்டுப்புறப்பாடல், , இயற்கை, விவசாயம், போன்ற தலைப்பில் எண்ணற்ற நடனங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு செய்தனர் ஆண்டு விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
Next Story



