பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரையில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மதுரை நகரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு இன்று (25.01.25) காலை தெப்பக்குளம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3000 மாணவிகளுக்கு திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைககள் பற்றிய விழிப்புணர்வு உரையாற்றினார் . விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தலைமையாசிரியை, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story