சிவன்மலை  ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

சிவன்மலை  ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
X
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை  ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் கோபால் தலைமை தாங்கினார். சிபி ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் அரங்க கோபால் மற்றும் கூடுதல் சார்பு நீதி பதி பிரியங்கா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். பள்ளி தாளாளர் பழனிச்சாமி வரவேற்று பேசினார். அகாடமி இயக்குனர் சவுத்ரி சிறப்பு விருந்தினர் களை கவுரவித்தார். முதல்வர் சுப்பிரமணி ஆண்டறிக்கை வாசித்தார். 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், 100 சதவீத மதிப்பெண் பெற வைத்த மாணவ, மாணவிகளையும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறவைத்த ஆசிரியர்களையும் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பணி ஓய்வு பெற்ற இளங்கலை ஆசிரியை ஆனந்தவள்ளிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் துணைத் தலைவர் உமாதேவி அர்ச்சுனசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.
Next Story