இலவச ஆயுர்வேத இயற்கை சிறப்பு மருத்துவம்

இலவச ஆயுர்வேத இயற்கை சிறப்பு மருத்துவம்
X
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தொடங்கி வைத்தார்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிக்குளம் கிழக்கில், அன்பு இயற்கை இல்லம் சார்பில், இலவச ஆயுர்வேத இயற்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, மருத்துவர் விஜயன் தலைமை வகித்தார். முகாமை, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பழனியப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நாராயணன், முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க தலைவர் தமிழரசன், திமுக ஒன்றிய பிரதிநிதி கணேசன் மற்றும் , ராஜகுமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
Next Story