கோவை: பேட் கேர்ள் திரைப்படம் - இந்து மக்கள் கட்சி புகார் !

கோவை: பேட் கேர்ள் திரைப்படம் - இந்து மக்கள் கட்சி புகார் !
X
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் திரைப்படம் பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டிருப்பதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் திரைப்படம் பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்டிருப்பதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா, மாநகர காவல் ஆணையாளரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில், பேட் கேர்ள் திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்துவதாகவும், பெண் குழந்தைகளை தவறாக சித்தரிப்பதாகவும், போக்சோ சட்டத்தை மீறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் டீசர் மற்றும் சில காட்சிகள் பள்ளி மாணவிகளின் தற்கொலை மிரட்டல் உள்ளிட்ட கருத்துக்களை ஊக்குவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த திரைப்படத்தை புகழ்ந்து பேசிய வெற்றிமாறன், விஜய் சேதுபதி, ரஞ்சித் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தத் திரைப்படம் தமிழக குடும்ப அமைப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பெருகி வரும் நிலையில், மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story