பெண்ணை கத்திரிக்கோலால் கிழித்த தையல்காரர் கைது

பெண்ணை கத்திரிக்கோலால் கிழித்த தையல்காரர் கைது
X
தையல்காரர் கைது
விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் வசித்து வருபவர் பால சுப்பிரமணியன் மனைவி தங்கமணி (வயது 48). இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் மூர்த்தி (68). தையல்கார - ரான இவருக்கும்,தங்கமணிக்கும் வீட்டுமனை அளப்பதில் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் தங்கமணி, தங்கள் வீட்டு பழைய மதில் சுவற்றை இடித்தபோது,அங்கு வந்த மூர்த்தி, எனக்கு சொந் தமான சுவற்றை எப்படி இடிக்கலாம் எனக்கேட்டு அவரை திட்டி அவரது உடலில் கத்திரிக்கோலால் கிழித்தார்.இதை தடுக்க வந்த தங்கமணியின் உறவினர் திவின் (22) என்பவரையும் மூர்த்தி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து தங்கமணி, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.
Next Story