மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகளுக்கு பாளையம்புதூர் மற்றும் தொப்பூர் ஆகிய இடங்களில் ஆட்சியர் சாந்தி ஆய்வு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகளுக்கு பாளையம்புதூர் மற்றும் தொப்பூர் ஆகிய இடங்களில் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும், பாலம் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களையும் மற்றும் சாலை அமைப்பதற்கான கட்டுமான பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,இ.ஆ.ப., நேற்று பிப்ரவரி 3 ஆய்வு செய்தார்கள்.உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் முடிவடைகிறது. உயர்மட்ட மேம்பாலம் அமைக்க உள்ளிட்ட பணிகள் கொண்டு அமைக்கபட உள்ளது.இந்த ஆய்வின்போது, சேலம் திட்ட இயக்குநர் (தேசிய நெடுஞ்சாலைகள்) சீனிவாசலு, திலீப் பில்ட் கான் நிறுவனத்தின் பொது மேலாளர் சின்ஹா, வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story