காரிமங்கலத்தில் தேங்காய் விற்பனை அமோகம்

காரிமங்கலம் வாரச்சந்தையில் 24 லட்சத்திற்கு தேங்காய்கள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் பிற்பகல் நேரத்தில் தேங்காய் பால் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற தேங்காய் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம் நேற்று பிப் 03 நடைபெற்ற தேங்காய் வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்ட நிலையில் தேங்காய் களின் அளவைப் பொறுத்து 12 ரூபாய் முதல் 23 ரூபாய் வரையில் தேங்காய் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 24 லட்சத்திற்கு தேங்காய்கள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story