மாவட்டத்தில் புதிய ஆட்சியர் பதவி ஏற்பு

தர்மபுரி புதிய மாவட்டஆட்சியராக சதீஷ் பொறுப்பேற்றுக் கொண்டார் அரசுத்துறை அதிகாரிகள் வாழ்த்து
தர்மபுரி மாவட்டத்தின் 46வது ஆட்சியராக ரெ.சதீஷ் நேற்று மாலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமது அறையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் புதிதாக பொறுப்புக்கு ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ரெ.சதீஸ் தான் மரியாதை செலுத்தமாக சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் போதை இல்லாத தமிழகம் உருவாக்குவதற்காகவும் தர்மபுரி மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் அடித்தட்டு ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டுமெனவும் மேலும் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் வேண்டும் எனவும் சிறப்பாக பணியாற்றுவேன் எனவும் தெரிவித்தார்.
Next Story