திட்டக்குடி: அவரச ஆலோசனை கூட்டம்

திட்டக்குடி: அவரச ஆலோசனை கூட்டம்
X
திட்டக்குடியில் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் தலித் பழங்குடி மக்கள் களத்தின் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தலித் பொதுமக்கள் தினம் தினம் பல்வேறு அடக்கு முறைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மற்றும் தலித் பொது மக்கள் மீது சுமத்தப்படும் பொய் வழக்கு தொடர்பாகவும், மற்றும் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்குதல் தொடர்பாகவும், தலித்- பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை வழங்குதல் தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொருளாளர் பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் முருகானந்தம், பஞ்சமி நில மீட்பு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, குமார்,பரிமளா, செல்வி, மற்றும் பல பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Next Story