மின்கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பலி

மின்கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பலி
X
பேய்க்குளம் அருகே மின்கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேய்க்குளம் அருகே மின்கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் கோயில்ராஜ் மகன் பிரின்ஸ் (21), இவர் தனது இருசக்கர வாகனத்தில் பேய்க்குளம் செல்லும் வழியில் இருசக்கர வாகனமானது நிலைத்தடுமாறி சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story