சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்

சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்
X
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எங்களது குழந்தைகள் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவந்தாகுளம், தூத்துக்குடியில் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், எங்களது குழந்தைகள் அரசு பள்ளிகளில் ஒரு சில காரணங்களால் தொடர முடியாதது மன வருத்தத்தை அளிக்கிறது. சிவந்தாகுளம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் LKG முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஏறக்குறைய 1000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியில் வசிக்கின்ற மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் 8- வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பு தொடர சி.வ. மேல்நிலை பள்ளி, V.E.ரோடு, பள்ளி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த பள்ளியானது எங்களது பகுதியில் இருந்து வெகு தொலைவில் அமைந்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமான Main Road ஆக இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது சாலை விபத்து ஏற்படுகிறது. ஆதலால் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு குழந்தைகளும், நாங்களும் கடந்த வருடமே கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கு அதிகப்படியான இடவசதியானது இந்த பள்ளியில் உள்ளது. மேலே குறிப்பிட்ட காரணங்களினால் எங்களது குழந்தைகளை தற்சமயம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த பள்ளியில் படித்தவர்கள் 8-ம் வகுப்பு முடித்தவுடன் சி.வ. உயர்நிலைப் பள்ளி செல்லாமல் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு, மேற்படிப்புக்கு செல்வது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்து தென் பகுதியில் நகர்புறத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் பள்ளிதான் அரசு பள்ளியாக உள்ளது. அதனால் எங்கள் பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்றினால், தென் பகுதி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அரசு பள்ளிகளில் கல்வித்தரம் அருமையாக அளிக்கப்பட்டு வரும் பட்சத்தில, உயர்நிலை கல்வி இல்லாத காரணத்தால், மாணவ, மாணவிய செல்வங்களை தனியார் பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே தயவு கூர்ந்து வருகிற 2025-2026-ம் கல்வியாண்டிலேயே தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவந்தாகுளம் பள்ளியில் 9-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு தொடங்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story