சோழர் கால பழமையான அகிலாண்டேஸ்வரி கோயிலை

புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த பாலாலயம்
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொளப்பாடு அக்ரஹாரம் பகுதியில், பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். இக்கோயிலில், புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, பாலாலய நிகழ்ச்சி, சிறப்பு யாக பூஜையுடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story