சேலத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

சேலத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
X
முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மாலை அணிவித்து அஞ்சலி
சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் அலுவலக வளாகத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமை தாங்கி அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாமலை, ராஜா, கோபால், ரவி, முருகன், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story