இரணியல்: கணவரை  தற்காலைக்கு தூண்டிய மனைவி கைது 

இரணியல்: கணவரை  தற்காலைக்கு தூண்டிய மனைவி கைது 
X
குமரி
குமரி மாவட்டம் இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் (47). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுனிதா (45). இவர்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்  நடந்தது. குழந்தைகள் இல்லை. மனைவி மீது அதிக பாசம் பெஞ்சமின் வைத்திருந்தார்.       இதற்கிடையே சமீபகாலமாக சுனிதாவின் நடவடிக்கை மாறியதால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சுனிதா திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதை அடுத்து பெஞ்சமின் அவசரமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் சுனிதா மாயமானது குறித்து இரணியல்  போலீசில் புகார் அளித்தார்.       போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த 28ஆம் தேதி பெஞ்சமன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாவதற்க்கு முன்பு சமூக வலைத்தளத்தில் உருக்கமான வீடியோவை அவர் வெளியிட்டது தெரிய வந்தது. அந்த வீடியோவில் தனது மனைவி சுனிதா கள்ளக்காதலுடன் ஓடி விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் சுனிதாவின் உறவினர் ஒருவர் அவரை மிரட்டியதாக கூறியிருந்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சுனிதாவை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும்  இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
Next Story