சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

X
சேலம் இரும்பாலை சாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் இளங்கலை, முதுகலை மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்புகளில் தமிழகம் மட்டுமன்றி, மற்ற மாநில மாணவ மாணவிகளும் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில் உயிர் வேதியியல் துறையில் ஆய்வக தொழில்நுட்புராக பணிபுரியும் ஒருவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் தேவிமீனாளுக்கு புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி விசாகா கமிட்டி தலைவர் மருத்துவர் சுபா தலைமையில், கடந்த 31ம் தேதி மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வக தொழில்நுட்புநரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

