ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.
X
மதுரை உசிலம்பட்டியில் ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதி புரம் வடக்கு தெருவில் வசிக்கும் ரவிச்சந்திரனின் மகன் ராஜீவ் காந்தி( 27) என்பவர் A.S ஆம்புலன்ஸில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் வாங்கும் சம்பளத்தில் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில்( பிப்.2) நேற்று முன்தினம் இரவு 9:30 மணியில் வழக்கம் போல் மது குடித்து வீட்டிற்கு வந்திருக்கிறார். இதற்கு அவரது தாயார் சத்தம் போட்டிருக்கிறார். அதன் பின்னர் தூங்க சென்ற ராஜீவ் காந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அண்ணன் கார்த்திக் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story