ராணிப்பேட்டை குறை தீர்வு நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்!

X

குறைதீர்வு நாள் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்!
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் ஜெயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் கீதாலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், உதவி ஆணையாளர் (கலால்) வரதராஜ் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில் மொத்தம் 333 மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டரின் விருப்பக்கொடை நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். இதில், பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Next Story