நெமிலியில் பள்ளி மாணவர்களிடையே மோதல்!

X

நெமிலி அருகே அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்
நெமிலி அடுத்த சம்பத்ராயன்பேட்டை பகுதியில் அரசு மேல்நி லைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் தேர்வு எழுத பயன்படுத்தும் அட்டையாலும், கைகளாலும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து ஆசிரியர்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று மாண வர்களுக்கு அறிவுரை கூறினர். பிற்பகலில் மாவட்ட கல்வி அதி காரி விஜயகுமார் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் உள் ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story