மின் விசிறியில் தூக்கிட சென்றவர் மின்சாரம் தாக்கி பலி.

X
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்வேலிப்பட்டி விஐபி நகரில் வசிக்கும் பாலகிருஷ்ணனின் மகன் அஷய் குமார் (30) என்பவர் எம்பிஏ படிப்பு முடித்துவிட்டு பெருந்துறையில் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக வயிறு வலி பிரச்சனை இருந்துள்ளது. இதற்கு நாட்டு மருந்து சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி அவரது ஊரில் நடக்கும் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் (பிப் .3) காலையில் இவருக்கு வயிறு வலி அதிகமான காரணத்தால் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

