மயிலத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

மயிலத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
X
ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம்,கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மயிலம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு சிமெண்டு சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை - செய்து தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மயிலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் புனிதா ராமஜெயம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், கிராம ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாறன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள்,அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story