குமரி : ஹோட்டல் கழிவுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல்

குமரி : ஹோட்டல் கழிவுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல்
X
அருமனை
குமரி மாவட்டம் வழியாக கேரளாவில் உள்ள ஹோட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொண்டு வரப்பட்டு இங்குள்ள நீர்நிலைகளில் மற்றும் பொது வழிகளில் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது.      இது தொடர்பான புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் படி போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விளவங்கோடு பகுதி மாங்கோடு என்ற இடத்தில் கூண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.       உடனடியாக போலீசார் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, வாகன டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார். இதை அடுத்து வாகனத்தை திறந்து பார்த்தபோது அதில் ஹோட்டல் கழிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, அருமனை போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story