இளைஞர் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்

பென்னாகரத்தில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை. பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் உறவினர்கள் சாலை மறியல். 
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ராமனூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் புகழேந்தி நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உறவினர்கள். புகழேந்தியை சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய இறப்பிற்கு  காவல் துறையில் சிலர் தொடர்பு இருக்கலாம் என உறவினர்கள் இன்று காலை பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அவரது உறவினரிடம் கேட்டபோது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புகழேந்திக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாகவும் அவர்கள் தனியார் விடுதியில் அறை எடுத்ததாகவும் அதை விடுதி பணியாளர்கள் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு காவல்துறையில் பணிபுரியும் சிலருடன் சேர்ந்து மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டதாகவும் இதுவரை ரூபாய் 10 லட்சத்துக்கும் மேல் பணம் பரித்துள்ளனர் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் மனம் உடைந்து புகழேந்தி அவரது வீட்டில் தூக்கில் தொங்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பென்னாகரம் டி.எஸ்.பி மகாலட்சுமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலை கைவிட செய்தார். புகழேந்திக்கு திருமணமாகி மூன்று மாதத்தில் கைக்குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story