கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

X

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து கடலூரில் இருந்து பழனி சென்று ஊருக்கு திரும்பிய போது விபரீதம் குழந்தைகள் உட்பட எட்டு பக்தர்கள் படுகாயம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை பகுதியை சேர்ந்த எட்டு பேர் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய டாட்டா சுமோ காரில் சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த பாரதி (வயது 23) என்ற இளைஞர் ஓட்டிச் சென்றார். தரிசனம் முடிந்து இரவு கடலூருக்கு செல்லும் வழியில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் மற்றும் வடமதுரை நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story