மாற்று இடத்தில் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் அர்ஜுன் சம்பத் பங்கேற்பு

30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வழிபாடு செய்து வந்த கோவிலை இடிக்கப்பட்டதை மாற்று இடத்தில் கட்டுவதற்காக நடைபெற்று பூமி பூஜையில், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் வழிபாடு செய்து வந்த கோவிலை இடிக்கப்பட்டதை மாற்று இடத்தில் கட்டுவதற்காக நடைபெற்று பூமி பூஜையில், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ சந்தன கோபாலகிருஷ்ண கோயில், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் அதனை இடிக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் தொடுக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த மாதம் ஜனவரி 27ம் தேதி கோவிலை இடித்து முழுமையாக அகற்றப்பட்டன, இதற்கு எதிர்ப்பு புல்லரம்பாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தநிலையில் அந்த கோவில் இடிக்கப்பட்ட இடத்தின் அருகே அப்பகுதி சார்ந்த முக்கிய கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 1 சென்ட் பட்டா நிலத்தை வாங்கி ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத, ஸ்ரீ சந்தன கோபால கிருஷ்ண, ஸ்ரீ சந்தான மற்றும் விநாயகர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், புல்லரம்பாக்கம் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியபோது, கடந்த ஒரு வருட காலமாக கோவில் அருகே தனியார் ஆக்கிரமிப்பு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை இணைந்து செயல்பட்டு தற்பொழுது அரசாங்கத்தால் ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறை சார்பில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருமானம் உள்ள கோயில்களை மட்டும் தான் நிர்வாகம் செய்து வருவதாகவும் அவர் குற்றசாட்டினர், மேலும் பொது மக்களே பல இடங்களில் தாங்கள் வழிபாட்டுக்காக இத்தகைய கோயில்களை அமைத்து வருவதாகவும், அத்தகைய கோயில்களை ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்றப்படும் போது அறநிலையத்துறை மௌனம் காப்பது ஏன் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
Next Story