தங்கம் மருத்துவமனையின் சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி.

தங்கம் மருத்துவமனையின் சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி.
X
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது, இத்தினத்தை முன்னிட்டு.
நாமக்கல்லில் உள்ள தங்கம் மருத்துவமனை சார்பாக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்பாண்டியன் குரூப்ஸ் மற்றும் கேஸ்பிளஸ் நிறுவனங்கள் தலைவர் நல்லுசாமி கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியின் இடையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தங்கம் மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் Thangam Allied Health Sciences கல்லூரி மாணவர்கள் இணைந்து கர்ப்பபை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். மேலும் புற்றுநோய்க்கான கருப்பொருளை (தனித்தன்மையால் ஒன்றிணைவோம்) மையமாக கொண்டு ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இப்பேரணியானது பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பயணியர் மாளிகையில் தொடங்கி தங்கம் மருத்துவமனையில் நிறைவு பெற்றது. பேரணியில் தங்கம் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், நாமக்கல் இந்திய மருத்துவ சங்கம், ரோட்டரி கிளப், இன்னர் வீல் கிளப்,நாமக்கல் மகப்பேறு மருத்துவர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
Next Story