கோவை: யானை - மனித மோதல்களைத் தடுக்க வேண்டும் !

கோவை: யானை - மனித மோதல்களைத் தடுக்க வேண்டும் !
X
கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை - மனித மோதல்களைத் தடுக்கவும், யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை - மனித மோதல்களைத் தடுக்கவும், யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர். அம்மனுவில், கோவையில் உள்ள 9 யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும். யானைகள் நடமாடுவதற்கு இடையூறாக இருக்கும் இடங்களை சீரமைக்க வேண்டும். கனிமவளக் கொள்ளையால் ஏற்பட்ட பள்ளங்களை மூடவும், யானை வலசை பாதையில் உள்ள இரும்பு கம்பிக் வேலிகளை அகற்றவும் வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலி மற்றும் இரும்பு கம்பிக் கயிறு வேலிகள் அமைக்க வேண்டும். யானை - மனித மோதலுக்கு முக்கிய காரணமே யானை வழித்தட ஆக்கிரமிப்புகள் தான். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் யானை - மனித மோதல்களைக் குறைக்க முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Next Story