கடையநல்லூரில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர்

X

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா மேல கடையநல்லூரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில் புரணவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தென்காசி பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story