தென்காசியில் திருக்கோயில் முன்பாக கம்பி கேட் அகற்ற பக்தர்கள் கோரிக்கை

தென்காசியில் திருக்கோயில் முன்பாக கம்பி கேட் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
X
திருக்கோயில் முன்பாக கம்பி கேட் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் முன்பாக கம்பி கேட் அமைத்து அதனுடைய எழில் தோற்றத்தை கெடுக்குமாறும் ,வருகிற பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்கு இடைஞ்சலாகவும், பக்தர்களையும் பொதுமக்களையும் துன்புறுத்தும் நோக்கில் ,இரவு வர்த்தகர்கள் அனைவரும் கடையடைத்து விட்டு மகிஷாசுரமர்த்தினி வழிபடுவதை தடுப்பதற்காகவும்,பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதை தடுப்பதற்காகவும் கம்பி கேட் போட்டு அடைப்பதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம்,ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் மற்றும் சிவனடியார்கள் சார்பாக மாநில குழுவின் அறிவுறுத்துதலின்படி ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் தென்காசி மாவட்ட தலைவர் சிவபால சுப்பிரமணியன் மனு அளித்தார்.63 நாயன்மார் சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் செண்பக ராமன் ஐயா அவர்கள் இந்த ஆலய பாதுகாப்பு இயக்கம் தென்காசி கோயில் அமைப்பாளர் செந்தில்குமரன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், இந்து முன்னணி தென்காசி நகர செயலாளர் நம்பிராஜன் மற்றும் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
Next Story