குமரி : பெண்ணின் சேலை பிடித்து இழுத்த ரவுடி

X

குளச்சல்
குமரி மாவட்டம் குளச்சல் அருகே ஆனைக்குழி பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி லீலா ( 65). இவருக்கும் குன்னன் விளையை சேர்ந்த ரோலிஸ் (40) என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ தினம் லீலா அந்த பகுதியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரோலீஸ் திடீரென லீலாவை வழி மறித்து தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முக்கிய நிலையில் ஆத்திரமடைந்த ரோலீஸ், லீலாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்து மேலும் அவரது சேலையை பிடித்து இழுத்து பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வகையில் நடந்து கொண்டாராம். இது குறித்து குளச்சல் போலீசில் லீலா புகார் செய்தார். குளச்சல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ் லியோன் ரோலீஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரபல ரௌடியான ரோலீஸ் மீது ஏற்கனவே குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் உள்ள நிலையில் ரோலீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story