தாமரைகுளம் சேகர சிஎஸ்ஐ சபையில் றாலி பெருவிழா

X

கன்னியாகுமரி
உலக கிறிஸ்தவ பக்திமுயற்சி சங்க தினம் உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் 42 சேகரங்களில் றாலிப்பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தாமரைகுளம் சேகர ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேகரத்துக்குட்பட்ட 9 திருச்சபைகளில் இருந்தும் போதகர்கள்,திருப்பணியாளர்கள், பொறுப்பாளர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய பவனி தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம், எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி ஜங்ஷன், ஆண்டிவிளை ஜங்ஷன் வழியாக மீண்டும் ஆலய வளாகத்தை அடைந்தது. இந்த பவனிக்கு சேகரத்து போதகர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். அதனைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிழ்ச்சியில் சேகர ஆலயத்தின் செயலாளர் கால்வின் வரவேற்புரையாற்றினார். சேகர கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்க செயலர் ரின்சோ ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். சேகர கணக்கர் ஜெப நல்வின் கணக்கு வாசித்தார். முன்னதாக நடைபெற்ற போட்டிகள் மற்றும் தேர்வுகளில் முதல் பரிசு பெற்று சாம்பியன்ஷிப் சுழற்கோப்பையை பல்பனாபன்புதூர் திருச்சபையும், இரண்டாம் பரிசை தாமரைகுளம் சேகர கஸ்பா சபையும், மூன்றாம் பரிசை புன்னையடி திருச்சபையும் பெற்றனர்.
Next Story