பூதப்பாண்டியில் விஷம் குடித்து லோடுமேன் தற்கொலை

X

குமரி
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த சிறு மடம் பகுதியை சேர்ந்தவர் கோலப்பன் (46). லோடுமேன். இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் கோலப்பன் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடனை அடைக்க முடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கோலப்பன் இரவில் வீடு திரும்பினார். பின்னர் அனைவரும் வழக்கம் போல் இரவில் உறங்கி விட்டனர். மறுநாள் ஒன்றாம் தேதி காலை கோலப்பன் திடீரென வாந்தி எடுத்தார். அவரது வாயிலிருந்து நுரை தள்ளியது. பெற்றோர் கேட்டபோது விஷம் குடித்ததாக கூறியுள்ளார். உடனே சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை . உயிரிழந்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story