திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு

நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு உயர்நிலைபள்ளியில், மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் ஞானசெல்வி முன்னிலை வகித்தார். சித்த மருத்துவர் அஜ்மல்கான், நிலவேம்பு குடிநீர் தயார் செய்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார். மேலும், டெங்கு, மலேரியா காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், உதவி தலைமையாசிரியர் நடராஜன், சுகாதார ஆய்வாளர் பரமநாதன், உடற்கல்வி ஆசிரியர் கவிதா மற்றும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
Next Story